முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனி முத்திரை பதித்தவர்: கல்வியாளர் வசந்திதேவிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2025      தமிழகம்
CM-1-2025-08-10

Source: provided

சென்னை : சிறந்த கல்வியாளராக தனி முத்திரை பதித்தவர் முனைவர் வசந்திதேவி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

சென்னை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற  மறைந்த முனைவர் வே. வசந்தி தேவியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கல்வி என்பது வியாபாரப் பொருளாகவோ, அதிகாரக் கோட்டைக்குள் பாதுகாக்கப்படுகிற ஆயுதமாகவோ இல்லாமல் - ஏழை - எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டும்; கல்விதான் அவர்களுக்கான ஆயுதம், அதுதான் அழிக்கமுடியாத செல்வம் என்கின்ற நோக்கத்தோடு தொடர்ந்து செயலாற்றி, அதற்கான இயக்கங்களை முன்னெடுத்தவர் முனைவர் வசந்திதேவி.

சிறந்த கல்வியாளராக, தனி முத்திரை பதித்தவர் முனைவர் வசந்திதேவி. கல்வியில் சீர்திருத்தத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தியவர்.  கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரித்து நின்றவர்.  முனைவர் வசந்திதேவியின் நினைவைப் போற்றும் இந்த நேரத்தில், அனைவருக்குமான கல்வி உரிமையை நிலைநாட்டுகின்ற திராவிட மாடல் அரசினுடைய செயல்பாடுகள் அனைத்தும் அம்மையாருக்கு செலுத்துகின்ற ஆக்கப்பூர்வமான அஞ்சலி என்று கூறி, முனைவர் வசந்திதேவிக்கு என்னுடைய புகழஞ்சலியை செலுத்துகிறேன்.. நன்றி! வணக்கம்!. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், மத்தியக் குழு உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், நீதியரசர் ஹரி பரந்தாமன், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ். குமரி, வழக்கறிஞர் ஹென்றி திபேன், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம், ஏ.ஐ.டி. இந்தியா, அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம், கல்விக்கான அடிப்படை உரிமைக்கான தமிழ்நாடு கூட்டணி, அறப்போர் இயக்கம், சமகல்வி இயக்கம், இந்திய மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து