முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸாவில் சண்டையை நிறுத்துங்கள்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2025      உலகம்
Benjamin 2023-10-31

Source: provided

காஸா : காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஸா சிட்டி முழுவதையும் படை பலத்தால் ஆக்கிரமித்து இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கச் செய்ய திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேல் முக்கிய அமைச்சர்கள அளவிலான கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு அந்நாட்டின் அமைச்சரவையால் இன்று(ஆக. 10) ஒப்புதல் வழங்கப்படும் என்றும் எதிர்பர்க்கப்படுகிறது.

ஆனால், இத்திட்டத்தால் பிணைக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் மக்கள் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று ராணுவம் எச்சரிக்கிறது. இந்தநிலையில், இத்திட்டத்துக்கு பொது வெளியில் எதிர்ப்பலை கடுமையாக வீசுகிறது. காஸாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு திட்டத்துக்கு ஏற்கெனவே சர்வதேச சமூகத்தால் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டிலும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, இஸ்ரேல் அரசுக்கு எதிராக மக்கள் தலைநகர் டெல் அவிவ் வீதிகளில் திரண்டு சனிக்கிழமை(ஆக. 9) இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பேரணி மற்றும் போராட்டத்தில் சுமார் 1,00,000 பேர் வரை பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளவர்களில், அங்கு எஞ்சியுள்ள 50 பேரையும் மீட்டுக்கொண்டுவர அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து