முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு தொடருக்குப் பின் ரோகித் சர்மா, கோலி ஓய்வு? - சவுரவ் கங்குலி பதில்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Ganguly 2023-08-26

Source: provided

கொல்கத்தா : இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.

ரோகித், கோலி ஓய்வு... 

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக, யாரும் எதிர்பாராத விதமாக இருவரும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். 

தொடர்ந்து விளையாட...

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற போதிலும், அவர்கள் இந்திய அணிக்காக தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளனர். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் வடிவிலான போட்டிகளில் மிகவும் சிறப்பான சாதனைகள் படைத்திருப்பதாகவும், சிறப்பாக விளையாடும் வரை அவர்கள் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடலாம் என உணர்வதாகவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மிகவும் கடினம்...

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெறப்போகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. அதனால், அந்த விஷயத்தில் என்னால் எதுவும் கூற முடியாது. அவர்கள் ஓய்வு பெறுவார்களா? மாட்டார்களா? எனக் கூறுவது மிகவும் கடினம்.

நம்பமுடியாத அளவுக்கு... 

நன்றாக விளையாடுபவர்கள் அணிக்காக தொடர்ந்து விளையாடுவார்கள். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி நன்றாக விளையாடினால், அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். ஒருநாள் போட்டிகளில் இருவரும் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளனர் என்றார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் வருகிற அக்டோபர் 19 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து