முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் குண்டு வெடிக்கும் என மிரட்டல்: ஜோதிடர் கைது - திடுக்கிடும் தகவல்

சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2025      இந்தியா
Mumbai-1 2025-09-06

Source: provided

மும்பை : மும்பையில் பயங்கரவாதிகள் ஊடுருவல், 34 வாகனங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த ஜோதிடரை போலீசார் கைது செய்து விசாரித்தரில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

நாடு முழுவதும் கடந்த 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியின் இறுதி நாளான நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. குறிப்பாக, மராட்டிய மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதனிடையே, மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ் அப் உதவி எண்ணுக்கு நேற்று முன்தினம் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், மும்பைக்குள் 14 பயங்கரவாதிகள் 400 கிலோ ஆர்.டி.எஸ். வெடி மருந்துடன் ஊருவியுள்ளதாகவும், அந்த வெடி மருந்துகளில் 34 வாகனங்களில் வைக்கப்படுள்ளதாகவும், அது வெடிக்க தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, மராட்டியம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையை தொஅங்கினர்.

இந்நிலையில், மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் என்று மிரட்டல் விடுத்த அஸ்வினி குமார் (வயது 51) என்ற ஜோதிடரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பீகாரை சேர்ந்த அஸ்வினி குமார் உத்தரபிரதேசத்தின் நொய்டா செக்டார் 79 பகுதியில் வசித்து வருகிறார். அஸ்வினி குமார் தனது நண்பரை போலீசில் சிக்க வைக்க பயங்கரவாத தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளார். அஸ்வினி குமார் மீது அவரது நண்பர் கடந்த 2023ம் ஆண்டு பாட்னா போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அஸ்வினி குமார் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் ஜாமீனில் வெளியே வந்த அஸ்வினி குமார் தனது நண்பனை பழிவாங்க சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.

அதன்படி, தனது நண்பரின் செல்போன் கிடைத்த நிலையில் அதில் இருந்து மும்பை போக்குவரத்து போலீசுக்கு வாட்ஸ்-அப் மூலம் பயங்கரவாத தாக்குதல் மிட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜோதிடர் அஸ்வினி குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து