முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்: 475 வெளிநாட்டினர் கைது

சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2025      உலகம்
USA 2025-09-06

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்த வெளிநாட்டினர் 475 பேரை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை கைது செய்து அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, அந்நாட்டின் ஜார்ஜியா மாகாணத்தில் தென்கொரிய நிறுவனமான ஹூண்டாய் கார் உற்பத்தி ஆலை உள்ளது. இங்கு மின்சார காருக்கான பேட்டரி உற்பத்தி ஆலை உள்ளது.

இந்நிலையில், ஜார்ஜியாவில் உள்ள ஹூண்டாய் கார் உற்பத்தி ஆலையில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்து வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கார் உற்பத்தி ஆலையில் நேற்று முன்தினம் பாதுகாப்புப்படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுற்றுலா விசாவில் அமெரிக்காவிற்கு வந்து சட்டவிரோதமாக கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்து வந்த வெளிநாட்டினர் 475 பேரை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 300க்கும் மேற்பட்டோர் தென்கொரிய நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

அமெரிக்காவில் 350 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய தென்கொரியா திட்டமிட்டுள்ள நிலையில் கைது நடவடிக்கை இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து