முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை கடந்து வந்த பாதை

சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2025      தமிழகம்
Gold 2024-10-28

Source: provided

சென்னை : தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட நிலையில், ரூ.21-ல் இருந்து ரூ.80 ஆயிரம் வரை தங்கம் விலை கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

’தங்கம்..’ எத்தனையோ உலோகங்களில் இதுவும் ஒன்று என்றாலும், இதற்கு இருக்கும் மதிப்பே தனிதான். பெண்களின் மனம் கவர்ந்ததாலோ என்னவோ, அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 1920-ம் ஆண்டு ரூ.21-க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று (செப்டம்பர் 6) புதிய உச்சம் தொட்டு ரூ.80,040 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலையும் ரூ.10 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.10,005 ஆக விற்பனை ஆனது. அந்த வகையில், தங்கம் விலை உயர்ந்து வந்த பாதையை காண்போம்.

(ஒரு பவுன்) 1920-ம் ஆண்டு -  ரூ.21, 1935-ம் ஆண்டு - ரூ.24, 1945-ம் ஆண்டு-ரூ.48, 1955--ம் ஆண்டு - ரூ.64, 1970-ம் ஆண்டு- ரூ.144,

1980-ம் ஆண்டு - ரூ.1,000, 2001-ம் ஆண்டு - ரூ.3 ஆயிரம், 2006-ம் ஆண்டு - ரூ.6 ஆயிரம், 2009-ம் ஆண்டு - ரூ.10 ஆயிரம், 2010- ம் ஆண்டு - ரூ.15 ஆயிரம், 2016-ம் ஆண்டு - ரூ.20 ஆயிரம், 2019-ம் ஆண்டு - ரூ.25 ஆயிரம், 2020-ம் ஆண்டு - ரூ.30 ஆயிரம், 2021-ம் ஆண்டு - ரூ.35 ஆயிரம், 2022-ம் ஆண்டு - ரூ.40 ஆயிரம், 2023-ம் ஆண்டு -  ரூ.45 ஆயிரம், 2024 (மார்ச் 28)-ம் ஆண்டு - ரூ.50 ஆயிரம், 2024 (ஏப்ரல் 3)-ம் ஆண்டு - ரூ.52 ஆயிரம், 2024 (மே 20)-ம் ஆண்டு - ரூ.55 ஆயிரம், 2024 (செப்டம்பர் 24)-ம் ஆண்டு - ரூ.56 ஆயிரம், 2024 (அக்டோபர் 19)-ம் ஆண்டு - ரூ.58 ஆயிரம், 2024 (அக்டோபர் 29)-ம் ஆண்டு - ரூ.59 ஆயிரம், 2025 (ஜனவரி 22)-ம் ஆண்டு - ரூ.60 ஆயிரம், 2025 (மார்ச் 14) -ம் ஆண்டு - ரூ.66 ஆயிரம், 2025 (ஏப்ரல் 12)--ம் ஆண்டு - ரூ.70 ஆயிரம், 2025 (ஜூலை 23)--ம் ஆண்டு - ரூ.75 ஆயிரம், 2025 (ஆகஸ்டு 29)-ரூ.76 ஆயிரம், 2025 (செப்டம்பர் 5)--ம் ஆண்டு - ரூ.78 ஆயிரம், 2025 (செப்டம்பர் 6)--ம் ஆண்டு - ரூ.80 ஆயிரம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து