முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை: சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2025      தமிழகம்
Sasikala 2025-08-30

Source: provided

காஞ்சீபுரம் : காஞ்சீபுரத்தில் ரூ. 450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. 

காஞ்சீபுரத்தில் பத்மாவதி சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சர்க்கரை ஆலையை ஹிதேஷ் ஷிவ்கன் பட்டேல் அவரது சகோதரர் தினேஷ் பட்டேல் நிர்வகித்து வந்தனர். இதனிடையே, இந்த சர்க்கரை ஆலையை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ரூ. 450 கோடிகு வாங்கியுள்ளார். ஆனால், சர்க்கரை ஆலை சசிகலாவின் பெயருக்கு மாற்றப்படாமல் பினாமி பெயரிலேயே செயல்பட்டு வந்தது.

அதேவேளை, சர்க்கரை ஆலை நிர்வாகம் வங்கி கடன் மோசடியில் சிக்கியது. இது தொடர்பாக சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் சர்க்கரை ஆலையை சசிகலா முறைகேடாக வாங்கி பினாமி எயரில் நடத்தி வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. சர்க்கரை ஆலை வங்கியில் ரூ. 120 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சார்பில் சி.பி.ஐ.-யிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சர்க்கரை ஆலையின் வங்கி கணக்குகள், ஆலையின் ஆவணங்களை சரி பார்த்தனர். அதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை ரொக்கமாக ரூ.450 கோடி வரை கொடுத்து சர்க்கரை ஆலையை வாங்கியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒபந்தம் போடப்படிருப்பதும் அதில் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் கையெழுத்து போட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பின் சசிகலா சர்க்கரை ஆலையை வாங்கியுள்ளார். இது தொடர்பாக சசிகலா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. சசிகலா வீட்டில் 2019ம் ஆண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ரூ. 450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கியது தொடர்பாக சசிகலாவிடம் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி குவிப்பது சட்டவிரோத நடவடிக்கை என்பதால் சசிகலா ரூ. 450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கி இருப்பதும் அது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சசிகலா மீத் கைது நடவடிக்கை பாய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து