முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹூப்ளி-ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை காலம் நீட்டிப்பு

சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2025      தமிழகம்
Tairn 2023-05-25

Source: provided

சேலம் : ஹூப்ளி-ராமநாதபுரம் சிறப்பு ரயிலின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் வழியாக ராமநாதபுரம் வரை ஹூப்ளி - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த ரயிலின் சேவை காலம் நீட்டிப்பு செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அதன்படி ஹூப்ளி-ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355) ஹூப்ளியில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி வழியாக இரவு 7.50 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக மறுநாள் காலை 5 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். இந்த ரயிலின் சேவை காலம் வருகிற 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் ராமநாதபுரம்-ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07356) ஞாயிற்றுக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல் வழியாக மறுநாள் காலை 5.45 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5.50 மணிக்கு புறப்பட்டு தர்மபுரி, ஓசூர் வழியாக இரவு 7.40 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இந்த ரயிலின் சேவை காலம் வருகிற செப்டம்பர் 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து