முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பதவியும் பறிப்பு: எடப்பாடி அதிரடி

சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2025      தமிழகம்
EPS 2024-04-10

Source: provided

சென்னை : செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பதவியும் பறிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ‘கெடு’ விதித்தார்செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலசோனையில் ஈடுபட்டார் . தொடர்ந்து செங்கோட்டையன் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்களும் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி அறிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் தம்பி (எ) கே ஏ சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஈஸ்வரமூர்த்தி (எ) சென்னை மணி , கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் குறிஞ்சிநாதன், அந்தியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் தேவராஜ் , அத்தாணி பேரூராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும்ரமேஷ் , துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வேலு (எ) மருதமுத்து, ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் மோகன்குமார் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து