முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 2 மாதங்களாக பெய்த மழைக்கு இமாசல பிரதேசத்தில் பலி : எண்ணிக்கை 366 ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2025      இந்தியா
Himachal 2025-09-07

Source: provided

சிம்லா : இமாசல பிரதேசம் மாநிலத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. மேலும்ரூ.4,079 கோடி மதிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

இமாசல பிரதேசத்தில், பருவமழையையொட்டி கடந்த 2 மாதங்களாக அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்றவை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர்.

வெள்ளம் தொடர்ச்சியாக, கால்நடைகள், வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என மதிப்பிடப்பட்டு உள்ளது. நீர் விநியோக திட்டங்கள், சாலைகள், மின்சார உட்கட்டமைப்புகள், பள்ளிகள், சுகாதார நலன், விவசாயம் மற்றும் வீட்டு வசதி சார்ந்த விசயங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன என திட்டமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் 6-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், பரவலாக ஏற்பட்ட பாதிப்புகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இதில், இமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புக்கு 366 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 203 பேர் மழை தொடர்பான பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தனர். 163 பேர் சாலை விபத்துகளில் சிக்கி பலியானார்கள். அதிக அளவாக நிலச்சரிவுகளில் சிக்கி 42 பேரும், நீரில் மூழ்கி 34 பேரும், மேகவெடிப்பில் 17 பேரும், மரம் விழுந்து அல்லது பாறைகள் உருண்டு 40 பேரும் பிற காரணங்களால் 28 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

இதேபோன்று, அரசு சொத்துகளில் ரூ.4,006 கோடி மற்றும் தனியார் சொத்துகளில் ரூ.67 கோடியும் பாதிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் ரூ.4,079 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 3,390 வீடுகள், 40 குடிசைகளும் சேதமடைந்து உள்ளன. 1,464 கால்நடைகளும், 26,955 பண்ணை பறவைகளும் உயிரிழந்து உள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து