முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய பிரதமர் நாளை பஞ்சாப் பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2025      இந்தியா
Modi-2 2025-04-06

Source: provided

புதுடெல்லி : பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் செப். 9 ஆம் தேதி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ளப் பேரிடரை சந்தித்துள்ளது. பஞ்சாபில் ஏற்பட்ட வெள்ளம் 1988 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் என்று கூறப்படுகிறது. இந்த வெள்ளத்திற்கு 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வெள்ளம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தையும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

குறிப்பாக, இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட கன மழை, மற்றும் பொங், ரஞ்சித் சாகர், பாக்ரா ஆகிய அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிகப்படியான நீர் ஆகியவை இந்த பேரிடருக்கு முக்கியக் காரணங்களாக கூறப்படுகின்றன. சட்லெஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதால், ஆயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பஞ்சாபில் 1,400 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் 1. 48 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மூழ்கின.

இந்தநிலையில், பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் செப். 9 ஆம் தேதி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் மாநில பா.ஜ.க.வின் எக்ஸ் தளப் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி செப். 9-ம் தேதி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூருக்கு வருகை தரவுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் விவசாயிகளையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளார்.

வெள்ளப் பாதிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வார். பிரதமரின் பஞ்சாப் பயணமானது, பா.ஜ.க. அரசு எப்போதும் பஞ்சாப் மக்களுடன் இருப்பதை நிரூக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தல் நாளான செப்.9 இல் பஞ்சாபில் இருந்தவாறு பிரதமர் மோடி வாக்களிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து