முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்குவரத்து விதிமீறல்: அபராதம் செலுத்திய சித்தராமையா

ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2025      இந்தியா
Siddaramaiah 2023 04 16

Source: provided

பெங்களூரு : காரில் பயணித்த போது கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா 6 முறை சீட் பெல்ட் அணியாமல் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து அவர் அபராதம் செலுத்தினார். 

கர்நாடக  முதல்வர் சித்தராமையா, அரசு சார்பில் வழங்கப்பட்ட இனோவா காரை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில், சித்தராமையா பயன்படுத்தி வரும் கார் 7 முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி சந்திரிகா ஹோட்டல் பகுதியில் சென்றபோதும், அதே ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி பழைய விமான நிலையச் சாலையில் லீலா பேலஸ் சந்திப்பு அருகிலும், ஆகஸ்ட் 20-ம் தேதி சிவானந்த சர்க்கிள் பகுதியிலும் காரில் சென்றபோதும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சித்தராமையா சீட் பெல்ட் அணியாமல் சென்றுள்ளார். மொத்தம் 6 முறை சித்தராமையா சீட் பெல்ட் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார். இது அந்தந்த பகுதிகளில் உள்ள நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும், இந்த ஆண்டு கடந்த ஜூலை 9-ம் தேதி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில்  ர் சித்தராமையாவின் காரை டிரைவர் வேகமாக ஓட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த 7 போக்குவரத்து விதிமீறல்களுக்கும் போக்குவரத்து போலீசார் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்திருந்தனர். 

தற்போது பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளுக்கு 50 சதவீத தள்ளுபடியில் அபராதம் செலுத்த போக்குவரத்து போலீசார் கால அவகாசம் வழங்கியுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் சித்தராமையா பயன்படுத்தும் காருக்கு விதிக்கப்பட்ட 7 விதிமீறல்களுக்கும் மொத்தம் ரூ.2,500 அபராதம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து