முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழு சந்திர கிரகணம்: இந்தியாவில் சென்னை, டெல்லி, மும்பை உள்பட பல நகரங்களில் பார்வையிட்ட மக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2025      தமிழகம்
Solar-eclipse 2024-04-08

Source: provided

சென்னை : இந்தியாவில் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று நிகழ்ந்த முழு சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

பேரண்டம் எப்போதுமே விந்தையானது. அந்த வகையில் நேற்று (செப்.7) இரவு முழு சந்திர கிரகணம் நடைபெற்றது. இதுவொரு அரிய நிகழ்வு. இதை வெறும் கண்களில் மக்கள் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள சூழலில் இந்நிகழ்வு இந்தியாவில் பல நகரங்களில் இதை பார்க்க முடிந்தது.

நிலவுக்கு எப்போதுமே நம் வாழ்வில் தனித்த இடம் உண்டு. குழந்தைகள், பெரியவர்கள், கவிஞர்கள், விண்வெளி ஆய்வாளர்கள் என ஒவ்வொருவரும் சந்திரனை சார்ந்து இருப்பது உண்டு. பகல் நேர பகலவனை காட்டிலும் இரவு நேர நிலவொளி பொழுது பலருக்கும் பிடிக்கும். கடற்கரையில் அமர்ந்தபடி நிலவை பார்த்து ரசிப்பது தனித்த அனுபவம். இரவு நேர வானம், விண்மீன் கூட்டம், அதற்கு மத்தியில் தவழும் வெண்மதி என அந்த காட்சியின் நிகழ் அனுபவம் அற்புதமாக இருக்கும்.

பூமியில் இருந்து பார்க்கும் போது சந்திரனின் வண்ணம் வெள்ளை நிறத்திலேயே பெரும்பாலும் தெரியும். இதற்கு காரணம் வளிமண்டல சூழல் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சந்திரனின் அசல் நிறம் சாம்பல் என கருதப்படுகிறது. அதில் உள்ள இயற்கை வளங்கள் காரணமாக அதை பூமியில் இருந்து பார்க்கும் போது சில இடங்களில் கருமை நிறத்தில் தெரிகிறது.

சந்திர கிரகணம் காரணமாக நேற்று பூமியில் இருந்து நிலவை பார்க்கும் போது ரத்த சிவப்பு நிறத்தில் சந்திரனை பார்க்க முடிந்தது. இதை பிளட் மூன்  என வானியல் ஆர்வலர்கள் வர்ணிக்கின்றனர். பொதுவாக பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது. சூரிய ஒளி பூமி மீது விழுந்து செல்கின்ற காரணத்தாலும், வளிமண்டல அமைப்பு காரணமாகவும் இந்த நேரத்தில் நிலவு ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த பிளெட் மூனை சுமார் 82 நிமிடங்கள் நேற்று பார்க்க முடிந்தது. அதாவது சரியாக நேற்று இரவு 11.42 முதல் அந்த 82 நிமிடங்கள் தொடங்கியது. 

பூமியில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இதை வெறும் கண்ணால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். உலக அளவில் மியான்மர், சீனா, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, எகிப்து, தாய்லாந்து, இந்தோனேசியா, ஜெர்மனி, ரஷ்யா, தென் கொரியா, இத்தாலி, வங்கதேசம், ஹங்கேரி, பிலிப்பைன்ஸ், கிரீஸ், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ருமேனியா, பல்கேரியா, ஜப்பான், துருக்கி, பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பார்க்க முடியும்.

இந்தியாவில் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சந்திர கிரகணத்தை பார்க்க முடிந்தது. சென்னை பிர்லா கோளரங்கம், புதுச்சேரி விமான நிலையம் அருகில் உள்ள ஹெலிபேட் பகுதியில் லாஸ்பேட்டையில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் சார்பிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சந்திரகிரகணத்தை முன்னிட்டு நேற்று இரவு 9 மணி முதல் சந்திர கிரகணம் முடியும் வரை இங்கு மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து