முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் : அக்டோபர் முதல் பணிகளை தொடங்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டம்

புதன்கிழமை, 10 செப்டம்பர் 2025      இந்தியா
Election-Commision 2023-04-20

Source: provided

புதுடெல்லி : பீகாரைத் தொடர்ந்து வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான பணிகளை வரும் அக்டோபர் முதல் பணிகளை தொடங்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தின் எந்த நாளிலும் பணிகளைத் தொடங்க தயாராக இருக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம், அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள்ளது. பீகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளத் தயாராவது குறித்து நேற்று (செப். 10) இந்திய தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில், அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை அக்டோபர் மாதத்துக்குள் தொடங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் அஸ்ஸாமில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நிகழாண்டு இறுதியில் இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நிகழாண்டு இறுதியில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி வரைவுப் பட்டியல் வெளியிட்டது. அதில் 7.24 கோடி வாக்காளர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டது. 65 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதையடுத்து, வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், உரிமை கோரல் மற்றும் ஆட்சேப விண்ணங்களைத் தாக்கல் செய்ய செப்டம்பா் 1-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. செப். 30-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து