முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் பிரதமர் வீட்டுக்கு தீவைப்பு: களத்தில் இறங்கிய ராணுவம்

புதன்கிழமை, 10 செப்டம்பர் 2025      உலகம்
Napal 2025-09-10

Source: provided

காட்மாண்டு : நேபாளத்தில் பிரதமர் வீட்டிக்கு தீவைக்கப்பட்டதால் ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அண்டை நாடான நேபாளத்தில், சமீபகாலமாக மாணவர்களும், இளைஞர்களும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். இளைய தலைமுறையை குறிக்கும்வகையில், ‘ஜென் சி’ என்ற குழுவை தொடங்கி, சமூக வலைத்தளங்கள் மூலமாக ஊழல் எதிர்ப்பு பிரசாரம் செய்து வருகிறார்கள்.

நேபாளத்தில் இயங்கி வரும் சமூக வலைத்தளங்கள் தங்களை 7 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சகம் ‘கெடு’ விதித்தது. அந்த கெடுவுக்குள் பதிவு செய்யாத பேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்பட 26 சமூக வலைத்தளங்கள் மீது நேபாள அரசு தடை விதித்தது.

இந்நிலையில் பிரதமர் அலுவலகத்துக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அவர் பதவி விலகக்கோரி கோஷமிட்டனர். ஜனாதிபதி ராமச்சந்திர பவுடலின் சொந்த வீடு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. உள்துறை மந்திரி பதவியில் இருந்து விலகிய ரமேஷ் லேகாக்கின் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள் மீது தடையை அறிவித்த தகவல் தொடர்பு மந்திரி பிரித்வி சுப்பா குருங்கின் லலித்பூர் மாவட்ட இல்லம் மீது கற்களை வீசினர். லலித்பூரில் உள்ள முன்னாள் பிரதமர் பிரசாந்தாவின் வீட்டை போராட்டக்காரர்கள் சூறையாடினர். காட்மாண்டுவில், மற்றொரு முன்னாள் பிரதமர் ஷெர் பகதுர் துபாவின் இல்லத்தையும் சூறையாடினர்.

வன்முறை சம்பவங்கள் காரணமாக, காட்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, நேபாள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ககன் தாபா, பிரதமர் சர்மா ஒலி தார்மீக பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் காட்மாண்டு சர்வதேச விமான நிலையத்தை நேபாள ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. முன்னதாக விமான நிலைய வளாகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளநிலையில், புதுடெல்லிக்கும் காத்மாண்டுவுக்கும் இடையே ஒரு நாளைக்கு ஆறு விமானங்களை இயக்கும் ஏர் இந்தியா, நேற்று முன்தினம் நான்கு விமானங்களை ரத்து செய்தது. இண்டிகோ மற்றும் நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் டெல்லியில் இருந்து காத்மாண்டுவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.

போராட்டக்காரர்கள் பிரதமர், ஜனாதிபதி ஆகியோரின் வீடுகளை எரித்ததைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் தலைமைச் செயலகக் கட்டிடமான சிங்தர்பரையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. ராணுவம் வளாகத்திற்குள் நுழைந்து போராட்டக்காரர்களை வெளியேற்றிய பிறகு அதனை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து