முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச விமான நிலையம் மூடல்; ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்

புதன்கிழமை, 10 செப்டம்பர் 2025      உலகம்
Napal 2025-09-10

காத்மாண்டு, காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அதேபோல நேபாள உச்ச நீதிமன்றமும் தனது விசாரணைகளை காலவரையின்றி நிறுத்தியுள்ளது. மேலும் வன்முறைகள் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது.

நேபாளத்தில் வெடித்த பயங்கர கலவரத்தை தொடர்ந்து காத்மாண்டு விமான நிலையத்தின் விமான சேவைகள் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய பாதகமான சூழ்நிலை, ராணுவக் கட்டுப்பாடு உத்தரவுகள் மற்றும் விமானப் பாதைகளில் ஏற்பட்டுள்ள புகை காரணமாக பாதுகாப்பு மீது கவலை எழுந்துள்ளதால், விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. தற்போதைய பதற்றமான சூழல் காரணமாக, நேபாள உச்ச நீதிமன்றம் அனைத்து விசாரணைகளையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறையில் உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து கோப்புகள், ஆவணங்கள் மற்றும் சேவையகங்கள் அழிக்கப்பட்டதாக தலைமை பதிவாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். இதன் காரணமாக, புதன்கிழமை திட்டமிடப்பட்ட விசாரணைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், வியாழக்கிழமை முதல் அனைத்து நடவடிக்கைகளும் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து