முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 22-ம் தேதி சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 10 செப்டம்பர் 2025      தமிழகம்
eps

Source: provided

சென்னை : சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் வருகிற 22-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவித்துள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிக்கு அருகில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மெடிக்கேர் என்விரான்மென்டல் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மருத்துவ உயிர்க்கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுமக்களின் ஆட்சேபனையால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த ஆலை அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு, தொற்று நோய், உயிர்க்கொல்லி நோய் ஏற்பட்டு சுற்று வட்டார மக்களை பலவகையான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது என தெரிவித்து, மானாமதுரை நகராட்சியைச் சேர்ந்த மக்களும், சூரக்குளம் பில்லறுத்தான் ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது ஆட்சி முடியும் தருவாயில், தி.மு.க. அரசு, இந்த ஆலையின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மானாமதுரை நகராட்சிக்கு அருகில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில், மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் வகையில் மேற்கொண்டு வரும், மெடிக்கேர் என்விரான்மென்டல் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மருத்துவ உயிர்க்கழிவு மறுசுழற்சி ஆலை கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தத் தவறிய தி.மு.க. அரசு மற்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி இந்நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் 22.9.2025 - திங்கட்கிழமை காலை 10 மணியளவில், மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கட்சி அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ஏ.ஏ.ராஜன் செல்லப்பா தலைமையிலும், கழக அமைப்புச் செயலாளர் ஹ.மு.சீனிவாசன், சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய நகர, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், நகர, பேரூராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து