முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு: அமீபா மூளைக்காய்ச்சல் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆனது நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2025      இந்தியா
Amoeba-2025-09-12

திருவனந்தபுரம், அமீபா மூளைக்காய்ச்சல் நோய்க்கு கேரளாவில் மேலும் ஒருவர் உயிரிந்த நிலையில் அங்கு  அமீபா மூளைக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் தீவிரப்படுத்த்தி உள்ளனர்.

கேரள மாநிலத்தில் மக்களை பல்வேறு நோய்கள் சமீபகாலமாக ஆட்டிப்படைத்து வருகிறது. அங்கு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து மூளையை தின்னும் அமீபா மூளைக்காய்ச்சல் என்ற அரிய வகை தொற்று நோய் பரவி வருகிறது. 

கோழிக்கோடு, திருவனந்தபுரம், வயநாடு, மலப்புரம், கொல்லம் பகுதிகளில் இந்த நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. கிணறுகள் மற்றும் குளங்களில் மாசுபட்ட நீரில் வாழும் இந்த அமீபா, குளிப்பது அல்லது அதில் முகத்தை கழுவுவதன் மூலம் மூக்கின் வழியாக மனித மூளைக்குள் நுழைந்து அங்குள்ள திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு வழிவகுக்கிறது. ஆபத்தான மூளை உண்ணும் அமீபா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்து வருகிறது.

தற்போது கோழிக்கோடு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தொற்றுக்காக 10 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் கோழிக்கோடு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆஷாஜி (வயது 47) என்பவர் உயிரிழந்தார். இவர் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள செலம்ப்ராவை சேர்ந்தவர். கடந்த மாதம் 9-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். 

கடந்த ஒரு மாதத்தில் மாதத்தில் இந்த காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 வாரங்களில் கோழிக்கோட்டை சேர்ந்த 3 மாத குழந்தை உள்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மூளைக்காய்ச்சல் அமீபா நோயால் பாதிப்பவர்கள் அதிரித்து வருவதால் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் கிணறுகள், குளங்களில் குளோரின் மருந்து தெளித்தல் உள்ளிட்ட துப்புரவு பணிகளை மேற்கொண்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் தீவிரப்படுத்த்தி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து