முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே பைக்கில் பயணம் செய்த 6 கல்லூரி மாணவர்கள்; சமூக வலைதளத்தில் வைரல்

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2025      தமிழகம்
Biuk 2025-09-12

Source: provided

சுரண்டை : ஒரே பைக்கில் பயணம் செய்த 6 கல்லூரி மாணவர்கள் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் 6 பேர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு சுரண்டை புதுமார்கெட் பகுதியிலிருந்து கல்லூரி வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர். அந்த காட்சியைப் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், பஸ்சில் இருக்கைகள் இருந்தாலும், பஸ்சின் படியிலே தொங்கியபடியும், மோட்டார் சைக்கிளில் இவ்வாறு ஆபத்தான முறையில் கல்லூரிக்கு தினமும் செல்வது தொடர்கதையாக உள்ளது என கூறப்படுகிறது. இதனால் கல்லூரி நேரங்களில் இந்தப் பகுதியில் போலீசாரை அமர்த்தி கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து