முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 நாட்கள் கெடு நிறைவடைந்தது: அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது நோக்கம் : செங்கோட்டையன் பேட்டி

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025      தமிழகம்
Cenkotaiyan- 2025-09-05

Source: provided

ஈரோடு : அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது என செங்கோட்டையன் தெரிவித்தார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விதித்த 10 நாட்கள் கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஈரோட்டில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது நோக்கம். அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே மனம் திறந்து பேசினேன். தொண்டர்கள், மக்களின் கருத்தையே நான் பிரதிபலித்தேன். அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

அண்ணாவின் பெயரால் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை ஜெயலலிதா கட்டிக் காத்தார். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார். எனவே, மறப்போம், மன்னிப்போம். அ.தி.மு.க. ஒன்றிணையும் விவகாரம் குறித்து புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்க கடமைப்பட்டிருக்கிறேன். 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி மலர அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து