முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிஷப் விளையாடுவது சந்தேகம்

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2025      விளையாட்டு
Rishabh-Pant--------

Source: provided

மும்பை : இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த், சொந்த மண்ணில் நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுற்றுப்பயணம்... 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி துவங்கி 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டு போட்டிகளும் அகமதாபாத் மற்றும் தில்லியில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்ற ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி’ தொடரில் இந்திய அணி விளையாடியது.

காலில் முறிவு... 

மான்செஸ்டரில் ஜூலை மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது பந்து பலமாக காலில் பட்டதால், ரிஷப் பந்த்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும், அபாரமாக விளையாடிய ரிஷப் பந்த் 75 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தார். இந்தப் போட்டிக்குப் பின்னர், 6 வாரங்கள் அவர் ஓய்விலிருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

துருவ் ஜூரேல்... 

இந்த நிலையில், அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் பங்கேற்கமாட்டார் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவருக்குப் பதிலாக துருவ் ஜூரேல் விக்கெட் கீப்பராகப் பணியாற்றுவார் என்றும், மாற்றுவீரராக தமிழக வீரர் ஜெகதீஷன் சேர்க்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து