முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ரோகித்; சச்சின் சாதனை முறியடிப்பு

புதன்கிழமை, 29 அக்டோபர் 2025      விளையாட்டு
Rogit-Sarma 2024-07-03

Source: provided

துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும், முதலிடத்தைப் பிடித்த அதிக வயதுடைய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

சிறப்பான ஆட்டம்...

சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற ரோகித் சர்மா, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இடம்பெற்ற ரோகித் சர்மா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவினார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50 ஆவது சதத்தையும் ரோகித் சர்மா பூர்த்தி செய்திருந்தார்.

781 புள்ளிகளுடன்... 

இந்த தொடரில், அதிகபட்ச ஸ்கோராக ரோகித் சர்மா 202 ரன்கள் குவித்த நிலையில், ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா அதிக ரன்கள் குவித்த நிலையில், சர்வதேச ஒருநாள் பேட்டர்களுக்கான புள்ளிப் பட்டியலில் 36 புள்ளிகள் அதிகரித்து 781 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 2023-ம் ஆண்டு முதல் ஒருநாள் ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்துவந்த ஷுப்மன் கில், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான் உள்ளார். அதே போல விராட் கோலி 1 இடம் பின் தங்கி 6-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் ஒரு அரை சதம் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் 23 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். 

சாதனை முறியடிப்பு...

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார். இதுவரை ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த அதிக வயதுடைய வீரராக சச்சின் இருந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு 38 வயது 73 நாள்களில் சச்சின் ஐ.சி.சி. டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருந்தார். தற்போது 38 வயது 182 நாள்களில் ரோகித் ஐ.சி.சி. பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒருநாள் தொடரில் ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வரும் சூழலில், சர்வதேச ஒருநாள் பேட்டர்கள் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்து பதிலளித்துள்ளார்.

268 போட்டிகளில்.... 

அதிக இன்னிங்சிஸ் விளையாடி முதல் முறையாக நம்பர் ஒன் இடத்தை ரோகித் பிடித்துள்ளார். அவர் 268 போட்டிகளில் விளையாடி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் குறைந்த போட்டியில் நம்பர் ஒன் இடத்தை எம் எஸ் தோனி பிடித்துள்ளார். அவர் வெறும் 38 போட்டிகள் விளையாடிய போது நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். இந்த வரிசையில் அடுத்ததாக சுப்மன் கில் (41 போட்டி), சச்சின் டெண்டுல்கர் (102 போட்டி), விராட் கோலி (112), ரோகித் சர்மா (268 போட்டி) ஆகியோர் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து