முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் மாநில முதல்வராக நவ.18-ல் பதவியேற்பேன் தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2025      இந்தியா
Tejaswi-Yadav

Source: provided

பாட்னா: பீகாரில் ‘இன்டியா’ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்றும், நவம்பா் 18-ஆம் தேதி பிகாா் முதல்வராகப் பதவியேற்பேன் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்.ஜே.டி.) தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.

ஆா்.ஜே.டி., காங்கிரஸ், இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக தேஜஸ்வி முன்னிறுத்தப்பட்டுள்ளாா். பாட்னாவில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறியதாவது: முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா். தோ்தல் நேரத்திலும் மிகவும் மோசமான சம்பவங்கள் இந்த ஆட்சியில் அரங்கேறி வருகின்றன.

பீகாருக்கு பிரசாரம் மேற்கொள்ள வந்துள்ள பிரதமா் மோடி இதைக் கருத்தில் கொண்டு பதிலளிக்க வேண்டும். பீகாரில் குற்றச் சம்பவங்கள் நிகழாத நாளே இல்லை என்பதே இங்குள்ள நிலவரம். எங்கள் கூட்டணி ஆட்சி அமைத்ததும் இந்த நிலை மாறும். நவம்பா் 14-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது. அதில் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். நவம்பா் 18-ஆம் தேதி பிகாா் முதல்வராகப் பதவியேற்பேன். நவம்பா் 26 முதல் ஜனவரி 26 முதல் பீகாரில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோா், சட்டம்-ஒழுங்கை மீறுபவா்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் செயல்களில் ஈடுபட்டவா்கள் அனைவரும் ஜாதி, மத வேறுபாடு இன்றி சிறையில் அடைக்கப்படுவாா்கள் என்றாா்.

பா.ஜ.க. பதில்: இது தொடா்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமா ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், ‘தேஜஸ்வி செய்தியாளா்களிடம் ஒரு தகவலைக் கூறியுள்ளாா். ஆனால், உண்மையில், தோ்தல் முடிந்த உடன் வெளிநாட்டுக்குச் சென்று பொழுதைக் கழிப்பதற்காக அவா் விமான டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. பிகாா் மக்கள் முதல்வா் நிதீஷ் குமாா் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனா். எனவேதான் தேஜஸ்வி தோ்தலுக்குப் பிறகு வெளிநாட்டுக்குச் சென்று ஓய்வெடுக்க விமான டிக்கெட் முன்பதிவு செய்துள்ளாா்’ என்றாா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து