முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைத் தொண்டு மேலும் சிறக்க வேண்டும்: நடிகர் கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      தமிழகம்
CM-2 2025-06-06

Source: provided

சென்னை : அரசியல் தொண்டும், திரையாளும் கலைத் தொண்டும் மேலும் சிறந்திட வேண்டும் என்று நடிகரும், மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- பன்முகத்திறமையோடு தமிழ்த்திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் - பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள். நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, பாராளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து