Idhayam Matrimony

பீகார் தோல்வியை மனதில் வைத்து கொண்டு அமளியில் ஈடுபட கூடாது: எதிர்க்கட்சியினருக்கு பிரதமர் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 1 டிசம்பர் 2025      இந்தியா
Modi 2023 07 30

புதுடெல்லி, பாராளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பீகார் தேர்தல் தோல்வியை மனதில் வைத்து கொண்டு எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட கூடாது என்று அவர் எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி, வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களும் பாராளுமன்றத்திற்கு நேற்று வருகை தந்துள்ளனர். இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். 

அப்போது அவர் பேசும்போது, இந்த குளிர்கால கூட்டத்தொடர் வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. பீகார் சட்டசபை தேர்தலில் பெண்களின் வாக்குப்பதிவு அதிகரித்து உள்ளது. கூடுதல் வாக்குப்பதிவு என்பது ஜனநாயகம் வலுப்பெறுவதற்கான அடையாளம். ஆனால் இந்த தேர்தல் முடிவுகளை சிலரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. பீகார் தேர்தல் தோல்வியை மனதில் வைத்து கொண்டு எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட கூடாது. 

இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார். அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே வைத்து கொள்ளுங்கள் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார். நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் புதிய நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தொடர் சுமுக முறையில் நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எந்த விஷயம் பற்றியும் பாராளுமன்றத்தில் விவாதம் செய்யலாம். இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை போற்றும் நாடாக உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து