முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாங்காங் தீ விபத்து: பலி 151 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 1 டிசம்பர் 2025      உலகம்
Hong-Kong-fire--2025-11-27

ஹாங்காங், ஹாங்காங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 151 பேர் ஆக உயர்ந்துள்ளது.

ஆசியாவில் அமைந்துள்ள நாடு ஹாங்காங். இதை தங்கள் நாட்டின் தன்னாட்சி பெற்ற பகுதியாக சீனா கருதுகிறது. இதனிடையே, ஹாங்காங் நாட்டின் தாய் பொ நகரில் வாங் பெக் கோர்ட்டு காம்பிளஸ் பகுதியில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடியில் ஆயிரத்து 984 வீடுகள் உள்ளன. இதில்சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வந்தனர். மேலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகே மேலும் சில அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகளும் நடைபெற்று வந்தன.

இதனிடையே, இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 27ம் தேதி மாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுக்குமாடி குடிருப்பின் பல்வேறு தளங்களுக்கு வேகமாக பரவியது. மேலும், கடுமான பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மர கட்டமைப்புகள் மூலமாக தீ மளமளவென அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் பரவியது.

இந்த தீ விபத்தில் ஏற்கனவே 128 பேர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. 104 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி சாங் ஷுக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து