முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

43.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 125 புதிய மின்சாரப் பேருந்துகள்: துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2025      தமிழகம்
DCM-1-2025-12-19

பூந்தமல்லி மின்சாரப் பேருந்து பணிமனை மற்றும் புதிதாக 125 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையிலும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையிலும் டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக உலக வங்கியின் உதவியுடன், மொத்த விலை ஒப்பந்தத்தில், 1,225 மின்சார பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில், முதற்கட்டமாக, அசோக் லெலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனத்திடமிருந்து 625 பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி ரூ. 208 கோடியில் 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பேருந்துகளை மின்னேற்றம் செய்வதற்கான கட்டுமானப் பணிகள், பராமரிப்புக் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.47.50 கோடியில் மேம்படுத்தப்பட்ட மின்சாரப் பேருந்து பணிமனையை வியாசர்பாடியில் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மேலும் 135 மின்சாரப் பேருந்துகள் சேவை பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து இயக்கப்பட்டன.

இந்த நிலையில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பூந்தமல்லி பேருந்து பணிமனை ரூ. 43.53 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மின்சாரப் பேருந்து பணிமனையாக மாற்றப்பட்டது. இந்த பணிமனையில் உரிய கட்டட உள்கட்டமைப்பு, பேருந்துகளுக்கு மின்னேற்றம் செய்வதற்கு 25 சார்ஜிங் பாய்ண்ட் அமைப்பு, பராமரிப்புக் கூடம், அலுவலக நிர்வாகக் கட்டடம், பணியாளர்கள் ஓய்வறை ஆகியவை புதுப்பிக்கப்பட்டும், புதிய மின்மாற்றிகள் பொருத்துதல் மற்றும் தீயணைக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 3-ஆம் கட்டமாக ரூ. 214.50 கோடி மதிப்பிலான 45 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகள், 80 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என 125 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட புதிய மின்சாரப் பேருந்து பணிமனை திறப்பு விழா மற்றும் 125 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி பூந்தமல்லி பணிமனையில் நேற்று காலை (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, புதிய பணிமனையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 3-வது கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சார பேருந்துகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மின்சாரப் பேருந்தில் ஏறி பயணம் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து