முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சங்கங்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நல்ல முடிவு எடுப்போம் - அமைச்சர் அன்பில் மகேஸ்

சனிக்கிழமை, 3 ஜனவரி 2026      தமிழகம்
Anbil 2

சென்னை, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ், போராடும் ஆசிரியர்கள் என் குடும்ப உறுப்பினர்கள் என்றும் ஆசிரியர்களை கைவிட மாட்டோம் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களிடம் நானும், அதிகாரிகளும் கடந்த 7 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து விமானத்தில் வரும்போது கூட முதல்வர் இதுபற்றி கேட்டார். ஓய்வூதியம் தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடைபெறுக்றது. அந்த கமிட்டி கூட்டம் முடிந்தவுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்.

இடைநிலை ஆசிரியர்கள் பற்றி பேசும்போது நிதித்துறை சில கருத்துகளை என்னிடம் சொல்லியுள்ளனர். அதை தெளிவுபடுத்தும் வகையில் நாங்கள் சில கோரிக்கைகளை வைக்கவுள்ளோம். ஓய்வூதியம் தொடர்பாக முதல்வர் என்னிடம் என்ன அறிவுறுத்துகிறாரோ அதை நிதி குழுவில் சொல்லி நல்ல முடிவு எடுக்கப்படும். நாங்கள் வாக்குறுதியில் சொன்னதைத்தான் கேட்கிறார்கள். அவர்கள் புதிதாக எதையும் சொல்லவில்லை.

பொதுவாக ஊதியக் குழுவில் உயர்வு இருக்கும். பணி நியமனம் தொடர்பாக, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன் சொன்ன சம்பளம் ஒன்றாகவும், நியமனத்துக்கு பிறகு பெறும் சம்பளம் ஒன்றாகவும் இருக்கும். அந்த வித்தியாசத்தை சரி செய்ய சொல்லி கேட்கிறார்கள். அதை நிறைவேற்றி தருகிறோம் என்று சொல்லியுள்ளோம். இது என்துறை சார்ந்த பிரச்சனை. துறை சார்ந்த அமைச்சர் என்ற முறையில் அதற்கு நல்ல விடிவை கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது. பொறுமையாக இருந்தாலும் அதை நிறைவேற்றுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறோம். போராடும் ஆசிரியர்கள் என் குடும்ப உறுப்பினர்கள். ஆசிரியர்களை கைவிட மாட்டோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து