முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2026      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் இன்று (ஜன. 5) மாலை 3 மணியளவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்னும் திட்டத்தை தொடக்கி வைக்கிறார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.,  முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசு, மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு திட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம், சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற “உலகம் உங்கள் கையில்” என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, இத்திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் இன்று மாலை 3 மணியளவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கும் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

“கல்வி அனைவருக்கும்! உயர்வு ஒவ்வொருவருக்கும்!” என்ற நோக்கத்துடன் தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த டெல், ஏசர், ஹெச்.பி. போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மடிக்கணினிகளில் இன்டெல் ஐ3/ ஏ.எம்.டி. ரெஜென் 3 ப்ராஸசர், 8 ஜி.பி. ரேம், 256 எஸ்.எஸ்.டி. நினைவகம், விண்டோஸ் 11 ஹோம் ஸ்டிராடிஜிக் மற்றும் பாஸ் லினெக்ஸ் ஓ.எஸ். ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக எம்.எஸ். ஆபிஸ் 365 மேலும் “அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்” என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான பெர்ப்லஸ்சிட்டி ப்ரோ-வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது.

அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகள், கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூக–பொருளாதார முன்னேற்றத்திற்கும் நேரடி ஆதாரமாக உதவுகின்றன. டிஜிட்டல் திறன் மேம்பாடு மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறை, மென்பொருள் உருவாக்கம், தரவு உள்ளீடு, டிஜிட்டல் சந்தைப்படுத்தல்,  வரைகலை வடிவமைப்பு, குறியிடுதல், வலை வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு கருவிகள், சுயாதீன வேலை போன்ற துறைகளில் “புதிய வாய்ப்புகளைப் பெறும் புதிய தலைமுறை” என்ற அளவில் தகுதியானவர்களாக மாணவர்களை மாற்றிட உதவுகிறது.

இதனால் குடும்ப வருமானம் உயர்ந்து, கிராம–நகர இடைவெளி குறைந்து, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழில் முயற்சிகளும் உருவாகும் வாய்ப்பு அமையும். இத்திட்டம், “கல்வி மூலம் சமூக மேம்பாடு; தொழில்நுட்பம் மூலம் பொருளாதார முன்னேற்றம்” என்பதையும், “உலகம் உங்கள் கையில்” என்ற தமிழ்நாட்டின் மாபெரும் டிஜிட்டல் கனவையும் நனவாக்கும் வரலாற்றுப் பெருமைகள் சேர்க்கும் மாபெரும் கல்விப் புரட்சித் திட்டம் ஆகும்.

இவ்விழாவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சாதனை படைத்த மாணவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து