முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெனிசுலா மீதான தாக்குதல்: அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு கமலா ஹாரிஸ் கடும் எதிர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2026      உலகம்
Kamala-Harris 2023 07-14

நியூயார்க், வெனிசுலா மீதான ட்ரம்பின் நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பானதல்ல என முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். 

மேலும், இதுதொடர்பாக கமலா ஹாரிஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மதுரோ ஒரு மிருகத்தனமான, சட்டவிரோத சர்வாதிகாரி என்பது இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் விவேகமற்றது என்ற உண்மையை மாற்றாது. இந்த படத்தை நாங்கள் முன்பே பார்த்திருக்கிறோம். எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதற்கான போரில் பாதிக்கப்போவது என்னவோ அமெரிக்க மக்கள் தான். எண்ணெய் மற்றும் தனிப்பட்ட அதிகாரத்திற்காக ட்ரம்ப் அரசு இந்த நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளது.

அமெரிக்க மக்கள் இதை விரும்பவில்லை, அவர்கள் பொய்களை கேட்டு அவர்கள் சோர்வடைந்துள்ளனர். இது போதைப்பொருள் அல்லது ஜனநாயகம் பற்றியது அல்ல. இது எண்ணெய் மற்றும் ஒரு பிராந்திய பலசாலியாகக் காட்டிக்கொள்ளும் டொனால்ட் ட்ரம்பின் விருப்பத்தை கொண்டது. அவருக்கு இதில் அக்கறை இருந்திருந்தால், தண்டனை பெற்ற போதைப்பொருள் கடத்தல்காரரை அவர் மன்னித்திருக்க மாட்டார் அல்லது மதுரோவின் கூட்டாளிகளுடன் ஒப்பந்தங்களைத் தொடரும்போது, வெனிசுலாவின் சட்டப்பூர்வமான எதிர்க்கட்சியை ஓரங்கட்டியிருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து