முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே வேலைக்கு நிலம்: லல்லு மீது குற்றச்சாட்டு பதிய டெல்லி நீதிமன்றம் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2026      இந்தியா
Laluprasad-Yadav 2023 07 31

டெல்லி, ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர், முன்னாள் ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, லல்லு யாதவ் ரயில்வே அமைச்சகத்தைத் தனது தனிப்பட்ட விஷயத்துக்காகப் பயன்படுத்தி, குற்றச் செயலைச் செய்ததாகவும், அதில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர்களுடன் சேர்ந்து யாதவ் குடும்பத்தினர் நிலங்களை வாங்குவதற்காக பொதுத்துறை வேலைகளைப் பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

உத்தரவின் முக்கியப் பகுதியை வாய்மொழியாக அறிவித்த நீதிபதி, சிபிஐயின் இறுதி அறிக்கை சந்தேகத்தின் அடிப்படையில் பெரிய சதியை வெளிப்படுத்துவாகக் கூறினார். அதோடு, லல்லு பிரசாத், அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவையும் அவர் நிராகரித்தார். ரயில்வே நிலங்களைக் கைப்பற்றக் குற்றக் கும்பலாகச் செயல்பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த வழக்கில் 41 பேர் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ததுடன், 52 பேரை விடுவித்தது. விடுவிக்கப்பட்டவர்களில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் தங்களது நிலங்களை விட்டுக்கொடுக்காத மாற்றுப் பணியாளர்களும் அடங்குவர். முன்னதாக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலை குறித்த சரிபார்ப்பு அறிக்கையை சிபிஐ சமர்ப்பித்திருந்தது. அதன் குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்ட 103 பேரில் ஐந்து பேர் இறந்துவிட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை முறைப்படி பதிவு செய்வதற்காக ஜனவரி 23-ஆம் தேதிக்கு இந்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து