முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்தில் உயிரிழந்த மதுரை மாணவியின் பெற்றோருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி: முதல்வர்

புதன்கிழமை, 4 மார்ச் 2026      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், வலையங்குளம் கிராமம், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவரின் மகள் துர்காதேவி (17 வயது) என்பவர் நேற்று முன்தினம் காலை சுமார் 9 மணியளவில் அவரது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் மதுரை தெப்பக்குளம் சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்றுகொண்டிருந்தபோது மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அவர் பயணம் செய்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் துர்காதேவி பலத்த காயமடைந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த மாணவி துர்காதேவியின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது பெற்றோருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து