முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை வழங்கியுள்ளார் : திருமங்கலத்தில் ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி

புதன்கிழமை, 4 மார்ச் 2026      தமிழகம்
Ops 2024-12-13

திருமங்கலம். 80 சதவீத அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைய உள்ளனர் என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை வழங்கியுள்ளார் எனவும் திருமங்கலத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். 

வரும் 7ம் தேதி மதுரை திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க.வினர் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவுக்கான பந்தல்கால் நடும் விழா நேற்று காலை ராயபாளையம் கலைஞர் திடலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக பத்திர பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி,முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்,தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன், முன்னாள் எம்.பி.க்கள் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம்,அய்யப்பன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பந்தல்கால் நடும் விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர்  ஓ.பி.எஸ் கூறியதாவது:  தி.மு.க. தலைவர், முதல்வர்  அவர்களது தலைமையேற்று பல்வேறு இயக்கங்களில் இருந்து தி.மு.க.வில் இணைகின்ற நிகழ்வு வருகிற 7ம் தேதி இங்கு நடைபெற உள்ளது. அந்த நிகழ்வின் முன்னேற்பாடாக பூமி பூஜை போட்டு நிகழ்வை தொடங்கியுள்ளோம். இந்த நல்ல நிகழ்வில் எங்களை அரவணைத்து கழகத்தில் இணைத்துக் கொண்ட முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த ஐந்தாண்டு கால சிறப்பான ஆட்சியில் நாட்டு மக்களுக்கும் அடித்தள மக்களுக்கும் எது தேவையோ அதை அறிந்து புரிந்து செயல்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் சிறப்பான ஆட்சியை முதல்வர்  செயல்படுத்திக் கொண்டிருக் கிறார். அந்த நிலை மீண்டும் தொடர வேண்டும். வரும் தேர்தலிலும் முதல்வர்  தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். சாதனை புரிந்த ஆட்சி மீண்டும் வரவேண்டும் தங்களுடைய விருப்பத்தை மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

அ.தி.மு.க. தொண்டர்கள் 80 சதவீதம் மேல் தி.மு.க.வில் இணைகிற நல்ல சூழல் உள்ளது. அனைத்து தரப்பட்ட மக்களை அரவணைத்து செல்கின்ற அவருடைய தலைமை ஏற்று மனப்பூர்வமாக இதயபூர்வமாக இணைகின்ற நிகழ்ச்சி தான் இது. எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் திருமங்கலம் இயற்கையான பெயரை எங்களுக்கு அமைந்திருக்கிறது‌. கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று நிறைவு பெறும். அதேபோல தமிழக முதல்வர்  மீண்டும் முதல்வராக வந்திடுவார் என்று தெரிவித்தார். அப்போது தி.மு.க. நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து