முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வின் கிளையாக இருந்த அ.தி.மு.க., தற்போது இலையாக மாறிவிட்டது: துணை முதல்வர்

சனிக்கிழமை, 7 பெப்ரவரி 2026      தமிழகம்
Udayanidhi-1 2024-11-17

விருதுநகர், பா.ஜ.க.வின் கிளையாக இருந்த அ.தி.மு.க., தற்போது இலையாக மாறிவிட்டதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விருதுநகர் இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம்போல, தமிழகத்துக்கு எந்தத் திட்டத்தையும் தரவில்லை. பட்ஜெட்டை அறிவித்து முடிப்பதற்கு முன்னரே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து சொல்கிறார். இந்தியாவிலேயே எடப்பாடி பழனிசாமிதான் முரட்டு அடிமை. இவ்வளவு நாள்களாக, பா.ஜ.க.வின் கிளையாக அ.தி.மு.க. இருந்தது. ஆனால், தற்போது பா.ஜ.க.வின் இலையாக மாறிவிட்டது.

இந்தியாவிலேயே 5 லட்சம் நிர்வாகிகள் மற்றும் மொத்தம் 50 லட்சம் தொண்டர்களைக் கொண்ட ஒரே கட்சி தி.மு.க.தான். நமது இளைஞர் அணி, மக்கள் பணியையும் கட்சிப் பணியையும் மேற்கொண்டு, மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது. எவ்விதக் கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லாமல் செயல்படுபவர்களும், எந்தக் கொள்கையும் இல்லாமல் கோஷமிடுபவர்களும் மக்களுக்கு எந்தப் பயனையும் தர மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து