முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 2 தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

புதன்கிழமை, 4 மார்ச் 2026      தமிழகம்
Siva-2026-03-04

சென்னை, மாநிலங்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக திருச்சி சிவா, ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தி.மு.க. தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி தி.மு.க. தரப்பில் இருந்து திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2026 மார்ச் 16 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 2 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக திருச்சி சிவா, எம்.ஏ., பி.எல்., பேராசிரியர். ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எம்.இ.எம்.பி, எம்.சி.ஏ,எம்.எல், பி.எச்டி, ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க. தரப்பில் சுதீஷ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  காங்கிரஸ் தரப்பில் யார் போட்டியிடுவார் என்பது விரைவில் தெரியவரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து