முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மாநிலம் இடுக்கியில் தேயிலை தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி..!

சனிக்கிழமை, 7 மார்ச் 2026      இந்தியா
Rahul-Gandhi-2023-04-13

இடுக்கி, கேரளத்தின் இடுக்கியில் உள்ள குட்டிக்கானத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

2026 கேரள சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராகுல் காந்தியின் இடுக்கி வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. கேரளம் வந்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், வர்க்கலாவில் உள்ள சிவகிரி மடத்தில் உள்ள ஸ்ரீ நாராயண குருவின் சமாதியைத் தரிசனம் செய்தார். 

இதனிடையே, கேரளத்தின் இடுக்கியில் உள்ள குட்டிக்கானத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார். வயநாட்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தனது அனுபவத்தையும், மாநில மக்களிடமிருந்து தான் கற்றுக்கொண்ட பாடங்களையும் அவர் தெரிவித்தார். 

இந்த ஆண்டு இறுதியில் கேரள சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதைத் தடுக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முயற்சிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து