முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களில் 9 பேர் பலி

சனிக்கிழமை, 7 மார்ச் 2026      உலகம்
Ukraine-war-2025-0

கீவ், உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் 2-வது மிகப் பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட பகுதிகள் மீது கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 6) நள்ளிரவு ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில், அங்குள்ள ஏராளமான குடியிருப்புக் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. மேலும், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில், 29 ஏவுகணைகள் மற்றும் 480 ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், குழந்தைகள் உள்பட ஏராளமனோர் படுகாயமடைந்துள்ளதாகவும், உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் ரஷ்யா உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அபுதாபியில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்திருந்தது.

இதையடுத்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களால் அபுதாபி பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தப் பேச்சுவார்த்தைகளை சுவிட்சர்லாந்து அல்லது துருக்கியில் நடத்தலாம் என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து