முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ரத்த வங்கி தொடங்கிய வரலாறு

Image Unavailable

1616 இல் வில்லியம் ஹார்வி என்பவர்தான் விலங்குகளின் உடலில் ரத்தம் பாய்கிறது என்பதை கண்டறிந்தார். 1665 இல் ரிச்சர்ட் லோவர் என்பவர் ஒரு நாயின் உடலிலிருந்து ரத்தத்தை மற்ற நாய்க்கு வெற்றிகரமாக மாற்றி உயிர் பிழைக்க செய்தார். 1667 இல் பிரான்ஸில்தான் மனித உடலில் ஒரு ஆட்டுக்குட்டியின் ரத்தத்தை ஏற்றி பரிசோதிக்கப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. 1668 இல் ரத்தம் தொடர்பான ஆய்வுகளுக்கு போப் தடைவிதித்தார். 1818 இல் ஒருவரின் ரத்தத்தை மற்றவருக்கு ஏற்றி வெற்றி கண்டார் மருத்துவர் ஜேம்ஸ் புளூன்ட். 1874 இல் ஒருவரின் ரத்தத்தையே சேமித்து அவருக்கே ஏற்றும் முறையை வில்லியம் ஹைமோர் என்பவர் முதன்முறையாக சோதித்து வெற்றி பெற்றார்.  கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் என்பவர்தான் யாருடைய ரத்தத்தையும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்ற இயலாது என்பதை நிரூபித்தார். பின்னர் 1900 இல் அவர் பரிசோதனையில்தான் ஏ,பி, ஓ வகை ரத்தங்கள் கண்டறியப்பட்டன. இதுதான் ரத்த பரிசோதனையின் மிகப் பெரிய திறப்பாக அமைந்தது. மருத்துவர் ஹூஸ்டன்தான் சோடியம் சிட்ரேட்டை பயன்படுத்தி ரத்தம் உறைதலை தடுக்க முடியும் என்பதை கண்டறிந்தார். இரண்டாம் உலகப் போரின் போது பால் பாட்டில்களை சுத்தம் செய்து அதில் ரத்தத்தை அடைத்து வீரர்களுக்கு ஏற்றுவதற்காக கொண்டு செல்லப்பட்டன.  உலகின் முதல் நடமாடும் ரத்த வங்கி ஸ்பானிய உள்நாட்டு போரின் போது 1930களில் அமைக்கப்பட்டது. முதல் ரத்த வங்கி அமெரிக்காவில் 1937 இல் மார்ச் 15 ஆம் தேதி சிகாகோ கூக் கவுன்டி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதல் ரத்த வங்கி 1939 இல் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்