எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிபிராஜுக்கு அதிர்ஷ்டம் தரும் 'கட்டப்பா'!
சிபிராஜுக்கு அதிர்ஷ்டம் தரும் 'கட்டப்பா'!
எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை திறம்பட உள்வாங்கி நடித்து, மக்களின் உள்ளத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சிபிராஜ். இவர் நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் அனைவரிடத்திலும் பெரும் பாராட்டுகளை பெற்றது மட்டுமின்றி சிபிராஜிற்கு தனி ஒரு அடையாளத்தையும் உருவாக்கி தந்திருக்கிறது.
தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜாக்சன் துரை திரைப்படம், ரசிகர்கள் இடையே அதீத எதிர்பார்ப்பை பெற்று வருகிறது. மாறுப்பட்ட கதை களங்களை தேர்ந்தெடுக்கும் சிபிராஜிற்கு அவருடைய திரை வாழ்வில் முக்கியமான படமாக வளர்ந்துக் கொண்டு இருக்கிறது 'கட்டப்பாவ காணோம் '. 'கட்டப்பாவ காணோம்' என்று தலைப்பிடப்பட்ட அடுத்த கணமே இந்த திரைப்படம் குழந்தைகள் உட்பட அனைத்து குடும்பங்களையும் கவர்ந்து விட்டது.
அதற்கு முக்கிய காரணம், கட்டப்பா என்னும் இந்த கதாப்பாத்திரம் ஒரு மீன் என்பது தான். "கட்டப்பா என்னும் அந்த மீன் ஒரு அதிர்ஷ்ட மீன் எனப்படும் வகையை சேர்ந்தது. அந்த மீன் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு அதிர்ஷ்டக் காற்று அடிக்கும் என்பதால் அந்த மீனை கைப்பற்ற கடும் போட்டியே நடக்கும். அப்பேற்பட்ட ஒரு மீனுடன் நடித்ததால் என்னுள் எனக்கே பெரும் மாற்றம் தெரிகிறது" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சிபிராஜ்.
சிபிராஜின் வாழ்க்கையில் மட்டுமின்றி, படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கையிலும் இந்த கட்டப்பா மீனானது தனது அதிர்ஷ்ட மழையை பொழிந்துள்ளது. தமிழில் மட்டுமே பாராட்டுகளை பெற்று வந்த நடிகை ஐஸ்வர்யாவை ஹிந்தி மற்றும் தெலுங்கு பட உலகில் கால் பதிக்க செய்திருக்கிறது இந்த கட்டப்பா.
அது மட்டுமில்லாமல், விநியோகஸ்தர்கள் பலர் இந்த 'கட்டப்பாவ காணோம்' திரைப்படத்தை வாங்க விருப்பம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது. இப்படி எல்லோர் வாழ்க்கையிலும் நல்ல காலத்தை ஏற்படுத்தி வரும் இந்த 'கட்டப்பாவ காணோம்' திரைப்படம், திரை வர்த்தகத்திலும் அதிர்ஷ்டமாக இருக்கும் என்றுக் கருதப் படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
முதல்வர் ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்: வரும் 4-ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை
28 Apr 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குடும்பத்தோடு கொடைக்கானல் செல்கிறார்.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது
28 Apr 2024திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
-
நீலகிரி ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி.க்கள் செயலிழந்த விவகாரம்: பாதுகாப்பில் எந்தவித குளறுபடியும் இல்லை: மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அருணா விளக்கம்
28 Apr 2024உதகை, நீலகிரி ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி.க்கள் செயலிழந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அருணா, பாதுகாப்பில் எந்தவித குளறுபட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
29 Apr 2024 -
பேருந்து மீது லாரி மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
28 Apr 2024லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் பேருந்து மீது லாரி மோதிய கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
-
நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க காங்கிரஸ் சதி: கர்நாடக கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கு
28 Apr 2024பெலகாவி, நமது மன்னர்களை இழிவுபடுத்திய காங்கிரஸ் இளவரசர் நவாப்கள், நிஜாம்கள் செய்த அட்டூழியங்களை மறந்துவிட்டார்' என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நாட்டின் ஜனநாயகத்தை அழிக்
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
28 Apr 2024சென்னை, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
தமிழக செஸ் வீரர் குகேசுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கி வாழ்த்து
28 Apr 2024சென்னை, கேண்டிடேட் செஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் டி.குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்துக்கான காசோலை மற்றும் கேடயத்தை வழங்கி தமிழக ம
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
கடும் வறட்சி எதிரொலி: நீர் மற்றும் உணவு தேடி கூட்டம் கூட்டமாக அலையும் யானைகள்
28 Apr 2024உடுமலை, கடுமையான வறட்சி நிலவி வருவதால் உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதியில் உள்ள யானைகள் குடிநீருக்காக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சன் - துரூவ் அபாரம்: லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான்
28 Apr 2024லக்னோ, லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 7விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
வன்முறைக்கு 2 வீரர்கள் பலி: உறுதியான நடவடிக்கை எடுப்போம்: மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் உறுதி
28 Apr 2024இம்பால், சி.ஆர்.பி.எப்.
-
ஜடேஜாவுக்கு பிளெமிங் புகழாரம்
28 Apr 202410 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
-
சி.எஸ்.கே - பஞ்சாப் அணிகள் மோதும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது
28 Apr 2024சென்னை, சி.எஸ்.கே. - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (ஏப்.29-ல்) தொடங்க உள்ளது.
-
உலக வில்வித்தைப்போட்டி: இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்
28 Apr 2024ஷாங்காய், சீனாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
-
மும்பையை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி
28 Apr 2024புதுடெல்லி, மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
43-வது லீக் போட்டி...
-
சீன பிரதமர் லி கியாங்கை சந்தித்தார் எலான் மஸ்க்
29 Apr 2024பெய்ஜிங் : தனது சீன பயணத்தின் போது எலான் மஸ்க் அந்நாட்டு பிரதமர் லி கியாங்கை நேரில் சந்தித்து பேசினார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலி
29 Apr 2024மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.