முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

புதுக்கோட்டை,ஜூன்,-3-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட பறக்கும்படை, வீடியோ கண்காணிப்புக்குழு, கண்காணிப்பு நிலைக்குழு உள்ளிட்ட 48 குழுக்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் வ.கலைஅரசி தலைமையில், தேர்தல் காவல் பார்வையாளர் ஹேம்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை அனைத்து குழுவினரும் பின்பற்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அனுமதியின்றி வாகனங்களை இயக்கினால் அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பிரச்சாரத்திற்கு மூன்று வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஊர்வலத்திற்கு மூன்று மூன்று மூன்று வாகனங்களாக பத்து வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஒவ்வொரு மூன்று வாகனத்திற்கும் இடையே 300 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பிரச்சாரம் மேற்கொள்ளும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் கொடிகளைக் கட்ட அனுமதி உண்டு. அவர் இல்லாத போது அந்த வாகனத்தில் கொடிகளைக் கட்டிப் பயன்படுத்த முடியாது. அனுமதியின்றி கொடிகள், தோரணங்கள் கட்டியிருந்தால் அதனை அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கட்சிப்பாகுபாடின்றி தேர்தல் நடத்தை நெறிமுறைகளை அமுல்படுத்திட குழு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் க.நாகராசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.சொக்கன் தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.முத்துமாரி ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்