முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ்: கிம்கிளிஜ்டர்ஸ் முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன். 29 - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2 -வது சுற் றில் நோவக் ஜோகோவிக்கும் மகளிர் பிரிவில் கிம் கிளிஜ்டர்சும் வெற்றி பெ ற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். இந்த வருடத்தின் 3-வது கிராண்ட் ஸ்லாம் போட்டி இங்கிலாந்து நாட்டி ன் தலைநகரான லண்டன் அருகே உள்ள விம்பிள்டனில் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்ட த்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதி த்து உள்ளனர். இந்தப் போட்டி தற் போது காலிறுதியை நோக்கி முன்னேறி வருகிறது. 

கிராண் ட் ஸ்லாம் போட்டியான இதி ல் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற் சாகப்படுத்தி வருகின்றனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 2-வ து சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல்  உலக நம்பர் - 1 வீரரான நோவக் ஜோகோவிக்கும்,  அமெரிக்க  வீரர் ரியானும் மோதினர். 

இந்த ஆட்டத்தில் செர்பிய வீரரான நோவக் எளிதில் வெற்றி பெற்றார். அவர் 6 -4, 6 -4 6 -4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்று க்குள் நுழைந்தார். 

மற்றொரு ஆட்டத்தில் உலகின் 8-ம் நிலை வீரரான டிஸ்பரோவிக்கும், அமெரிக்க வீரர் ரியான் சுவிட்லிங்கும் மோதினர். இதில் செர்பிய வீரர் 5-7, 7-5, 7-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

மகளிருக்கான ஒற்றயைர் பிரிவின் 2-வ து சுற்று ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் வீராங்கனை கிம்கிளிஜ்டர்சும், செக். குடியரசு வீராங்கனை கிளார்க் கோவும் மோதினர். 

இதில் அனுபவமிக்க பெல்ஜியம் வீரா ங்கனை கிம் அபாரமாக ஆடி, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கிளார்க்கை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்