முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் மீது தாக்குதல்: இஸ்ரேலை தூண்டி விடுகிறதா அமெரிக்கா?

செவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை. - 31 - அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமெரிக்காவில் அதிபரை தீர்மானிக்கும் சக்திகளாக விளங்கும் யூதர்களின் வாக்குகளை பெறுவதற்காக ஈ்ரான் மீது இஸ்ரேல் போர் தொடுக்கக் கூடிய நிலை உருவாகியிருக்கிறது. அமெரிக்காவில் நவம்பர் 6-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாவும் குடியரசுக் கட்சி சார்பில் மிட்ரோம்னியும் போட்டியிடுகின்றனர். இருவரும் வாக்குகளை பெறுவதற்காக அனைத்து விதமான யுக்திகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இருப்பது இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் வேலை வாய்ப்புகளை கொடுத்த விவகாரம்தான்.  மேலும் அமெரிக்க தேர்தலில் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்திகளான விளங்கும் யூதர்களின் வாக்குகளைக் கவருவதற்கு எந்த எல்லைக்கும் செல்ல இரண்டு வேட்பாளர்களும் முடிவு செய்துள்ளனர். ்ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈ்டுபட்டு வருவதால் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று இஸ்ரேல் மிகவும் முனைப்பு காட்டியது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவோ இதற்கு உடன்படவில்லை. இதையடுத்து ்ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் ்ஈரான் விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. இது யூதர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  மேலும் தேர்தலும் நெருங்கிவிட்ட நிலையில் இப்போது ்ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலை இரண்டு வேட்பாளர்களும் தூண்டிவிட்டு வருகின்றனர். அண்மையில் இஸ்ரேல் சென்ற ஒபாமாவின் ஆலோசகர் டோனிலான் பிரதமர் நெதான்யாஹூவை சந்தித்து 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது ்ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு வேட்பாளரான மிட்ரோம்னியோ ்ரான் மீது இஸ்ரேல் கண்டிப்பாகத் தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அத்துடன் இஸ்ரேல் பயணத்தையும் மேற்கொண்டு ்ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!