வெண்கலப்பதக்கம் வென்றுள்ள சாய்னாவுக்கு ரூ.1 கோடிபரிசு

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

அரியானா, ஆக. - 6 - வெண்கலப் பதக்கம் வென்றுள்ள சாய்னாவுக்கு ரூ. ஒரு கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அரியானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா அறிவித்துள்ளார். சாய்னாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர், சாய்னாவின் சாதனை வளர்ந்து வரும் வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சாய்னா இப்போது ஐதராபாத்தில் இருந்தாலும் அவரது சொந்த மாநிலம் அரியானா. அதனால் அவருக்கு ரூ. ஒரு கோடி ரொக்கப் பரிசை வழங்கி உள்ளது அரியானா அரசு.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: