யுவராஜ் உட்பட 25 பேருக்கு அர்ஜூனா விருது

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 23 - ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய்குமார், வெண்கலம் வென்ற யோகேஷ்வர் தத் ஆகியோர் ராஜீவ் காந்தி கேல் வத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதே போல் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உட்பட 25 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மாளிகையில் வரும் 29 ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியின் போது இந்த விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குகிறார். ராஜீவ் கேல் ரத்னா விருதுடன் ரூ. 7.5 லட்சம் மற்றும் பட்டயமும், அர்ஜூனா விருதுடன் ரூ. 5 லட்சம், பட்டயம் மற்றும் நினைவுப் பரிசும் வழங்கப்படுகிறது. 

பொதுவாக ஒரு ஆண்டில் ராஜீவ் கேல் ரத்னா விருது ஒருவருக்கும், அர்ஜூனா விருது 15 பேருக்கும் வழங்கப்படும். ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு இருவரும், அர்ஜூனா விருதுக்கு 25 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

விஜய்குமார்(துப்பாக்கி சுடுதல்), யோகேஷ்வர் தத்(மல்யுத்தம்), அர்ஜூனா விருதுகள் தீபிகா குமாரி, எல்.பி. தேவி(வில்வித்தை), சுதாசிங், கவிதா ரெஜத்(தடகளம்), அஸ்வினி பொன்னப்பா, காஷ்யப்(பாட்மின்டன்), ஆதித்ய மேத்தா(மில்லியர்ட்ஸ் அண்ட் ஸ்னூக்கர்), விகாஸ் கிருஷ்ணா(குத்துச் சண்டை), யுவராஜ் சிங்(கிரிக்கெட்), சர்தார்சிங்(ஹாக்கி), யஷ்பால் சோலங்கி(ஜூடோ), அனுப்குமார்(கபடி), சமீர் சுஹாக்(போலோ), அன்னுராஜ் சிங், ஓம்காராசிங், ஜாய்தீப், கர்மாகர்(துப்பாக்கி சுடுதல்), தீபிகா பலிக்கல்(ஸ்குவாஷ்), சந்தீப் செஜ்வால்(நீச்சல்), சோனியா சானு(பளூ தூக்குதல்), நர்சிங் யாதவ், ராஜீந்தர் குமார், கீதா போகத்(மல்யுத்தம்), பிமோல்ஜித்சிங்(ஊஷூ), தீபாமல்லிக், ராம்கரண்சிங்(தடகளம், மாற்றுத்திறனாளிகள்) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: