முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்கொலைக்கு முயன்றாராம் பாக். வெளியுறவு அமைச்சர்

ஞாயிற்றுக்கிழமை, 30 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், செப். - 30 - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர், தனது கணவர் பிரோஸ் குல்சாரின் கள்ளத்தொடர்பை கண்டுபிடித்தவுடன் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக வங்க தேச பத்திரிக்கை பிளிட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் தனது கள்ளக்காதலனான அதிபர் சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோவை மணப்பதில் தீவிரமாக உள்ளார். இதற்கிடையே ஹீனாவின் கணவர் பற்றிய செய்தியை பிளிட்ஸ் வெளியிட்டுள்ளது. ஹீனாவின் கணவர் பிரோஸ் குல்சார் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை ஹீனா கண்டுபிடித்து விட்டாராம். இதனால் மனமுடைந்த ஹீனா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இந்த விவகாரத்திற்கு பிறகே கணவன், மனைவி இடையே இருந்த நம்பிக்கை கெட்டு விட்டதாம். ஹீனாவும் பிலாவலும் அடிக்கடி போனில் பேசிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் இன்டர்நெட்டிலும் மணிக்கணக்கில் சாட்டிங் செய்வார்களாம். பிலாவலுடன் இவ்வளவு நேரம் என்ன சாட் செய்வாய் என்று கேட்டால் அரசியல் விவகாரங்களைப் பற்றி பேசுவதாகக் கூறி ஏமாற்றி வந்துள்ளாராம். இந்நிலையில் பிலாவலை மணந்தே தீருவேன் என்று ஹீனா தனது கணவர் மற்றும் சர்தாரியிடம் சண்டை போடுகிறார் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்