முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரை விமர்சனம் ``செம்பட்டை''

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, அக்.-14 - கடல் சார்ந்த பகுதியில் பாசக்கார அண்ணன், தம்பியாக வாழும் மீனவர்களின் கதை. நாயகன் திலீப் (செம்பட்டை) மனநிலை பாதிக்கப்பட்டவர். பெற்றோர்களை இழந்த இவரை தன் அண்ணன் ஸ்ரீஜித் பாதுகாப்பு கொடுத்து வளர்த்து வருகிறார். ஸ்ரீஜித்தை உப்புவிற்கும் மீனவப்பெண் ஆனந்தி காதலிக்கிறார். ஆனால், ஸ்ரீஜித்திற்கு ஆனந்தியை பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் மனநோயாளி திலீப் ஆனந்தியை காதலிக்கிறார். ஆனால், ஆனந்திக்கு திலீப்பை பிடிக்கவில்லை. இந்த சூழலில் தன்னுடைய தம்பி திலீப் குணமாக வேண்டும் என்றால் நீ அவனை திருமணமம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்ரீஜித். தனது காதலன் கேட்டதற்காக திலீப்பை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார் ஆனந்தி. இந்நிலையில் மீன் குத்தகைதாரர் அய்யாவுடன் பகை ஏற்படுகிறது. நடுக்கடலில் வைத்து ஸ்ரீஜித்தை கொலை செய்கிறார் அய்யாவு. தன் அண்ணனை கொலை செய்தவர்களை பழிவாங்க துடிக்கிறார் திலீபன். இது நடந்ததா, அண்ணன் விரும்பியது போல் ஆனந்தியை திருமணம் செய்துக் கொண்டாரா என்பது க்ளைமாக்ஸ். மனநோயாளியாக திலீபன் அற்புதமாக நடித்திருக்கிறார். கூத்துப்பட்டறையின் பயிற்சி அவருக்கு கை கொடுத்திருக்கிறது. இவருடைய அண்ணனாக நடித்திருக்கும் ஸ்ரீஜித் தன்னுடைய கேரக்டரில் அற்புதமாக நடித்திருக்கிறார். நாயகி கெளரி நம்பியார் படம் முழுக்க மனதில் நிறைந்திருக்கிறார். திலீபன் தாய்மாமனாக நடித்திருக்கும் கூத்துப்பட்டறை சார்ச் நடிப்பில் சதம் அடித்திருக்கிறார். இவர்களுடன் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். சலீம் ஒளிப்பதிவு காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கிறது. பாடல் சார்ந்த காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சி. ஸ்ரீராகவ் இசையில் பாடல்கள் ரசிக்கலாம். பின்னணி இசை திருப்தி இல்லை. மகாவிஷ்ணுவின் எடிட்டிங் கோர்வை. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஐ.கணேஷ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis