முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றிக்காக கடுமையாக உழைக்கிறேன்: விஜய்சேதுபதி

வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ.23 - என்னோட படத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைக்கிறேன். அதற்கான பலன் கிடைக்கிறது என்கிறார் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் விஜய்சேதுபதி. சீனுராமசாமி இயக்கத்தில் வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகனவர் விஜய்சேதுபதி. தற்போது இவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் பீட்சா வெற்றி நடைபோடுகிறது. இந்நிலையில் பீட்சா படத்திற்கு முன்பு வெளிவர வேண்டிய நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.​

படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பிறகு படம் வெளிவராமல் தள்ளிப்போனது. இப்போது வருகிற 30-ம் தேதி அந்த படம் திரைக்கு வருகிறது. இதுபற்றி நிருபர்களிடம் விஜய் சேதுபதி கூறியதாவது:-

சினிமா எண்ட்ரி என்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நடிக்க வந்த பிறகுதான் தெரிந்துக் கொண்டேன். என்னோட முதல் படம் சீனுராமசாமி சார் இயக்கிய தென் மேற்கு பருவக்காற்று. இந்த படம் வெளிவந்து அதிக நாட்கள் ஓடவில்லை. ஆனால், படப்பிடிப்பு நடந்த போது படம் பேசப்படும் படமாக இருக்கும் என்றேன். அதேபோல பேசப்பட்டது. தேசிய விருதுகளை வாங்கி கொடுத்தது. அப்போது நிறைய வாய்ப்புகள் வந்தன. கதை சரியில்லாததால் ஒத்துக் கொள்ளவில்லை. பீட்சா கதை பிடித்திருந்தது, நடித்தேன். இப்போது எதிர்பாராத அளவில் வெற்றி பெற்றியிருக்கிறது.

பீட்சாவுக்கு முன்பு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் வெளிவந்திருக்க வேண்டும். வெளிவரவில்லை அதற்கு முக்கிய காரணம் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு முன்னதாக பத்திரிக்கையாளர் காட்சி போடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் ரசித்து சிறந்த படம் என்று பாராட்டினார்கள். அப்போது முப்பது பிரிண்ட்டுகள் போடுவதாக இருந்தது. இந்த ரிசல்ட் கேட்ட பிறகு இன்னும் நல்லா விளம்பரபடுத்தி அதிக பிரிண்ட் போடலாம் என்று கருதினோம். அதனால் அப்போது படத்தை ரிலீஸ் செய்யவில்லை. தற்போது  ஜெ.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக  எஸ்.சதிஷ்குமார் ரிலீஸ் செய்கிறார். இவர் ஏற்கனவே ஆரோகணம் படத்தை ரிலீஸ் செய்தவர். நூற்று ஐம்பது பிரிண்ட் தமிழ்நாடு முழுக்க போடப்பட்டிருக்கிறது. வருகிற 30-ம் தேதி படம் திரைக்கு வருகிறது. அடுத்து ரம்மி, சூதுகவ்வும், பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்  படத்தின் தெலுங்கு, இந்தி ரீமேக் உரிமையை நடிகர் இயக்குனர் தியாகராசன் வாங்கியிருக்கிறார். என்னோட படங்களின் வெற்றிக்காக கடுமையாக உழைக்கிறேன். அதற்கான பலன் கிடைக்கிறது. அதேபோல கூத்துப்பட்டறையின் பயிற்சி எடுத்திருந்தாலும் படப்பிடிப்புக்கு முன்பு நடிக்க வேண்டிய காட்சிகளை ரிகல்சர் செய்த பிறகுதான் கேமரா முன்பு நிற்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony