முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குப்பெட்டிகளுக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு - ஜி.ராமகிருஷ்ணன்

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - தமிழகத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் தமிழக போலீசார் மட்டுமே உள்ளனர். இங்கு கூடுதலாக மத்திய ரிசர்வ் படையினரையும் பணியிலமர்த்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு ஜி.ராமகிருஷ்ணன் கோரியுள்ளார்.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஏப்ரல் 13 அன்று நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒருசில அசம்பாவிதங்கள் தவிர பொதுவாக அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். 

வாக்குப்பதிவு முடிந்துள்ள போதிலும், வாக்கு எண்ணிக்கை  மே 13 அன்றுதான் நடைபெறவுள்ளது. அதுவரை வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். 

தற்போது வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள் தமிழகத்தின் பல்வேறு மையங்களில் தமிழக காவல்துறையினர் பொறுப்பில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு போதுமானதாக இருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவுத்தேர்தல், சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல், மக்களவைக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றின்போது தி.மு.க.வினர் நடத்திய  வன்முறைகள்  முறைகேடுகள், தில்லுமுல்லுகள் ஆகியவற்றுக்கு தமிழக காவல்துறை இணக்கமாகவே இருந்துள்ளது. 

எனவே, தாங்கள் இதனை கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களிலும் தமிழக காவல்துறையினரோடு  கூடுதலாக மத்திய ரிசர்வ் படையினரையும் பணியிலமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த கடிதத்தில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis