முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிச.24-ம் தேதி எம்.ஜி.ஆர். நினைவு நாள்: முதல்வர் அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.21 - டிச.24 ஆம் தேதி எம்.ஜி.ஆர். நினைவு நாள் ஆகும். அன்று முதல்வர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் 

எம்.ஜி.ஆர். அமரர் ஆகிய நாள் 24.12.1987.  அவரது 25​ஆவது ஆண்டு நினைவு நாளான 24.12.2012 திங்கட் கிழமை அன்று காலை 10 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, அவரது நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், 

கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், 

கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!