முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் விரோத வங்கி மசோதாவை எதிர்த்து வேலை நிறுத்தம்

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 21 - பொதுமக்களின் நலனைக்கருதி வங்கி ஊழியர்கள் மத்திய அரசின் மக்கள் விரோத வங்கி மசோதாவை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்வதாக வங்கி ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறியுள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்கள் விரோத வங்கி மசோதாவை இடது சாரிகளின் எதிர்ப்புக்கிடையே நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில்  தாக்கல் செய்துள்ளது.

இந்த மசோதாக்கள் பொதுத்துறை வங்கிகளின் வாக்களிக்கும் உரிமையை 1 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. மேலும் பொதுத்துறை வங்கிகளில் தனியார்துறை வங்கிகளை 10 சதவிகிததிலிருந்து 26 சதவிகிதம் வரை இணைக்கப்படுவதற்கு இந்த மசோதா அனுமதியளிக்கிறது. இந்த மசோதாக்களின் சட்ட பிரிவுகளை பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் கட்டுப்பாட்டை வலுவிழக்கச் செய்கிறது. மத்திய அரசு நிர்வாகத்தில் உள்ளது என்ற பெயர் பலகையை தவிர மற்ற நிர்வாகங்கள் அனைத்தும் 5 பெரும் முதலாளிகளின் கையில் குவிந்து விடும். தேசிய தனியார் வங்கிகளில் உள்நாட்டு தனியார் வங்கிகளில் 4000 ஆயிரம் கோடி முதலீடும் 9 லட்சம் கோடி ரூபாய் பொது மக்கள் சேமிப்பும் உள்ளன. இவற்றிற்கு அதிகமான போதுமான அந்நிய முதலீடுகளும் கிடைத்துள்ளன. இவற்றிற்கு வாக்குரிமையை 26சதவிகிதம் வரை உயர்த்துவதால் இந்த வங்கிகளுக்கு அந்நிய முதலீடு 74 சதவிகிதம் வரை கிடைக்கும். இந்த மிகப் பெரிய முதலாளிகளின் நோக்கம் சாதரண பொதுமக்களின் நலனுக்கு எதிரானதாக இருக்கும். 2008- ல் அமெரிக்காவில் லேக்மேன் சகோதரர்களில் வீழ்ச்சியை அடுத்து 454 தனியார் வங்கிகள் தோல்வி அடந்தன. கடந்த 51 மாதங்களில் சராசரியாக மாதந்தோறும் 9 வங்கிகள் திவாலாகின. மத்திய நிதி அமைச்சர் இரண்டு மூன்று வங்கிகளை சர்வதேச அளவு வங்கிகளாகவும் ஏழெட்டு வங்கிகளை தேசிய அளவிலான வங்கிகளாகவும் மாற்ற முயற்சிக்கிறார். 

மத்திய நிதி அமைச்சகம் பல புதிய வங்கிகளை திறக்க அனுமதி அளிக்கிறது. எனவே இந்த சூழ்நிலையில் எது உண்மை என்று தெரியவில்லை. அவர்கள் போட்டியை ஏற்படுத்த இவ்வாறு செய்வதாக கூறுவது தவறு. 

பொதுத்துறை வங்கிகள் கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகளின் சிறந்த சேவைக்கு பின்னும் 50 சதவிகிதம் மக்களுக்கு வங்கி சேவை கிட்டவில்லை. 85 சதவிகிதம் மக்களுக்கு வங்கி கணக்கு இல்லை. 638,000 கிராமங்களில் 95 சதவிகிதத்திற்கு வங்கிகள் இல்லை. எனவே கிராமப்புற இந்தியாவுக்கு வங்கிச்சேவை விரிவுப்படுத்த வேண்டும். 

கடந்த 22 ஆண்டுகளில் 500 தனியார் வங்கிகள் மூடப்பட்டன. 1969 -ல் 14 பெரிய வங்கிகளும் 1980 -ல் 6 பெரிய வங்கிகளும் தேசிய மயமாக்கப்பட்டன. ஆனால் மத்திய அரசு தற்போது வரலாற்றை 43 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்துகிறது. இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அகில இந்திய வங்கி ஊழியர்  சங்கம் அகில இந்திய வங்கி அலுவலர் சங்கம் ஆகியவற்றின் அழைப்பின் பேரில் 1 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது 65000 தேசிய மற்றும் தனியார் வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவெங்கும் வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் லட்சக்கணக்கில் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் 1000 இடங்களில் நடைபெற்றுள்ளது. மற்றும் பல்வேறு வங்கி ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்குபெற்றுள்ளன.

பொதுமக்களின் நலனைக்கருதி நடக்கும் இந்த போராட்டத்தால் ஏற்பட்டுள்ள இடையூறுகளை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis